இலங்கைவானிலை

எல்நினோ தாக்கம் தீவிரம்: ஜூலை முதல் இலங்கையில் அதிக வெப்பம் – நீர்த் தட்டுப்பாடு அபாயம் எச்சரிக்கை

Desktop Image Mobile Image

மத்திய பசுபிக் பெருங்கடலில் உருவான எல்நினோ (El Niño) காலநிலை தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் பரவியுள்ளதால், எதிர்வரும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை இலங்கையில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எல்நினோ தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய அவர், குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடுமையான நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக எச்சரித்தார்.

 

மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை வறட்சி நிலை நீடிக்கும் என்றும், அதன் பின்னர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், நீர் சேமிப்பு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

 

எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் நீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க, பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக இருந்து நீர் வளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

SEO Keywords:

Related Articles

Back to top button