
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுதொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான appeal applications, செப்டம்பர் 7ஆம் திகதி முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழி முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக, மாணவர் கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள Username மற்றும் Password ஆகியவற்றைப் பயன்படுத்தி onlineexams.gov.lk இணையத்தளத்தின் SCHOOL LOGIN பகுதிக்குள் நுழைந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, விடைத்தாள் மீளாய்வுக்காக appeal செய்ய விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்களை செப்டம்பர் 21ஆம் திகதிக்குள் பாடசாலை அதிபர்கள் ஊடாக உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




