இந்தியாசெய்திகள்

நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு

Desktop Image Mobile Image

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இந்திய நதிகளில் இருந்து ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தின் சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நான்கு அடையாளம் தெரியாத சடலங்களும், அங்கிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் நதிகளின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்களாக இவை இருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மீட்கப்பட்ட சடலங்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுடையதா அல்லது வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுடையதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரால் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,400க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீட்கப்பட்டுள்ள ஏழு சடலங்களும் இதுவரை நேபாளத்தின் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு