ஹோர்முஸ் நீரிணையில் மேலும் ஒரு கப்பலை தடுத்த ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் “குற்றச் செயலில் ஈடுபட்டதாக” குற்றம் சாட்டப்படும் இரண்டாவது கப்பல் மீது நடவடிக்கை எடுத்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ்படை (IRGC) அறிவித்துள்ளது.
குறித்த கப்பல் தொடர்பான மேலதிக விவரங்கள் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் என ஈரான் குற்றஞ்சாட்டும் “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்” நீடித்தால், அதற்கு பதிலடியாக மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்புகள் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்தி விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




