இந்தியா

மாம்பழம் சாப்பிட்ட 2 சகோதரிகள் உயிரிழப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

Desktop Image Mobile Image

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்டதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கு உள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த வைஜிநாத் மற்றும் இந்துமதி தம்பதியினர் ஹைதராபாத்தில் வசித்து வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், குடும்பத்தின் உறவினரான ரேணுகா, நாராயணகுடா பகுதியில் உள்ள ஜல்மண்டலி அலுவலகம் அருகே வாங்கிய மாம்பழங்களை அவர்களிடம் வழங்கியுள்ளார்.

 

 

அந்த மாம்பழங்களை இந்துமதி மற்றும் அவரது நான்கு மகள்களும் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் திடீரென வயிற்றுவலி மற்றும் வாந்திப்போக்கு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் கச்சிகுடாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், குடும்பத்தின் மூன்றாவது மகளான 17 வயதுடைய புவனேஸ்வரி கடந்த 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இளைய மகளான 10 வயதுடைய சந்தியாவும் கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தாயார் இந்துமதி மற்றும் மற்ற இரண்டு மகள்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சிறுமிகளின் உயிரிழப்பு தொடர்பில் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாராயணகுடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்று அங்கிருந்த உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கைகள் கிடைத்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாம்பழங்களே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணிகள் உள்ளனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர்