தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அங்கொட – மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி மாலை, முச்சக்கரவண்டியில் வந்த அவர், குறித்த பெண்ணின் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பலத்த தீக்காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது முகம் மற்றும் மார்பு பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பெண்ணின் சட்டபூர்வ கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து, இன்று (24) முல்லேரியா பொலிஸ் பிரிவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெற்றோல் போத்தலும் முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா
களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது?
வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி
பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம்
AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை!
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு
யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம்
தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம்
யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்