FIFA Final: ஸ்பெயின் வெற்றிக்குப் பின் மைதானத்தில் பரபரப்பு

2026 பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கூடுதல் நேரத்தின் 106ஆவது நிமிடத்தில் பெர்ரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது.
இறுதி விசிலுக்குப் பிறகு ஸ்பெயின் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாகச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தடுக்க முயன்ற ஸ்பெயின் வீரர் காவியும் (Gavi) சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதுடன், இதனால் இரு அணிகளின் வீரர்களும் மைதானத்தில் ஒன்றுகூடி பதற்றமான நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போட்டி ஒழுங்குமுறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்களா என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.




